திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள், வீடுகளில் திருட்டு நடைபெறாமல் தடுப்பது, இணையதள மோசடிகள், சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் நலனுக்காக தொடர்ந்து இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறை மூலம் நடத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப.விற்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்