விருதுநகர்: விருதுநகர்,காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் ஆப் காரியாபட்டி பெர்பெக்ட் சார்பில் பொது மக்களுக்கான இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் தலைவர் அழகர்சாமி தலைமையிலும், செயலாளர் விக்டர் முன்னிலையிலும் நடைபெற்றது. முகாமினை, லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை இயக்குனர் லயன் கிருபா ராஜகுமார் தூக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக, மாவட்டக் கவுன்சிலர் லயன் தங்கத் தமிழ்வாணன், லயன் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், பொதுமக்களுக்கு, இரத்த அழுத்த பரிசோதனை இரத்தத்தில் சர்க்கரை அளவு , எடை மற்றும் நீரிழிவு தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்குறிச்சி அமலா இரத்த பரிசோதனை நிர்வாகி லயன் முனீஸ்வரன் மருத்துவப் பணியாளர்களுடன் பங்கேற்றார். நிகழ்வில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்கள் சிவகுமார் , பொன்ராம் , திருநாவுக்கரசு, ஜெயகுமார், செந்தில்குமார், மணிகண்டன், பிரின்ஸ், பரக்கத் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றனர் .நிகழ்வில், பயனடைந்த பொதுமக்கள் லயன்ஸ் கிளப் சேவையை மிகவும் பாராட்டினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி