திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (23.07.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப, 24 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்