திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியான அரியான்வாயலில் பகல் நேரங்களில் கனரக வாகனங்களை தடை செய்யக்கோரியும், இரயில்வே மேம்பாலப் பணியால் பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் தார்சாலையாக சீரமைக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியான்வாயல் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதிக அளவிலான தூசி புழுதியால் வியாபாரிகள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் கண்எரிச்சல், மூச்சி திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
சாலை மறியலால் போக்குவரத்து ஒரு மணிநேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. இது குறித்து பேச்சுவார்த்தைக்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் சதிஷ் குமார் அவர்கள் நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தையை துவங்கினர். இதில் கனரக வாகனத்தை இரவு நேரங்களில் மட்டும் தாங்கள் இயக்கிக்கொள்வதாகவும் மேலும் தினமும் காலையில் சாலையில் சிதறிக்கிடக்கும் சாம்பல்களை சுத்தம் செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். மேலும் தங்களது கனரக வாகனங்கள் சுமையை தாங்கும் அளவிற்கு சாலையை இரண்டு நாட்களில் சீர்செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்ததின் பெயரில் பொதுமக்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தை நிறுத்தி கலைந்துசென்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு