திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவலப் பாதையில் அண்ணா செட்டி மடம் பகுதியில் 5 தலைமுறைகளாக வசித்து வந்த 150 க்கு மேற்பட்ட வீடுகளை காலி செய்ய நீதிமன்றம் உத்திரவிடபட்ட நிலையில் அங்கு வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து வருவாய் துறை சார்பில் பொதுமக்களுக்கு இரண்டு சென்ட் அளவிலான வீட்டுமனைகள் வழங்கப்படுவதாக காலை கூறி அழைத்துள்ளதாகவும் தற்போது 150 க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ஒரு சென்ட்க்கு குறைவாக காலிமனை பட்டா வழங்கியதாகவும் ,தங்களை அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் – காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.