திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையத்தை சேர்ந்த சுகுமார் தமது மனைவி அன்னபூர்ணாவுடன் (28). இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கவுண்டர்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அன்னபூர்ணா தலையில் பலத்த காயங்களுடன் மயங்கினார். உடனடியாக பொதுமக்கள் அவரை மீட்டு திருவொற்றியூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த உறவினர்கள் கவுண்டர்பாளையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் – மணலி சாலையில் சாலை தடுப்புகளால் விபத்துக்கள் அதிகரிப்பதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை தடுப்புகளால் விபத்துக்களில் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் புகார் தெரிவித்தனர். துறைமுகத்திற்கு செல்லும் கண்டைனர் லாரிகளுக்காக போடப்பட்ட சாலை தடுப்புகளை உடனே அப்புறப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு