செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி இரண்டாவது வார்டு வேத நாராயணபுரம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு இல்லாத பகுதியில் தனி நபரின் விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையில் சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு கல்வெட்டுகள் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் யாருக்கும் பயனில்லை என்று பொதுமக்கள் வேதனை அடைகின்றனர். மற்றும் அரசு அதிகாரிகளும் இதற்கு துணையாக உள்ள அதிகாரிகள் மேல்நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம். மாவட்டம் ஆட்சி தலைவர் அலுவலகம் அருகில் உள்ள இந்தப் பகுதியில் இது போன்ற அவலங்கள் இதனைகண்டு கொள்ளாத செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் இது போன்ற தவறு செய்யும்அதிகாரிகள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்