அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சோதனைச் சாவடிகள், லாட்ஜ்கள் மற்றும் முக்கிய பொது இடங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாவட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கை, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், சட்டவிரோத செயல்களை தடுக்கவும் உதவுகிறது.
















