திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M. சுதாகர், இ.கா.ப., அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்தனர். மனுக்களை பரிசீலித்த அவர், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகள் காலதாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும் என்றும், காவல் துறை மக்களுடன் நெருக்கமாகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
















