திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வரும் நிலையில் (21-01-2026) அன்று நடைபெற்ற முகாமில் 21 நபர்கள் அவர்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் முனைவர்.நெ.மணிவண்ணன் இ.கா.ப.,விடம் அளித்தார்கள். அவர்களது புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்தார். இம்முகாமில் காவல் துணை ஆணையர்கள் மரு.சி.மதன் இ.கா.ப.,(மேற்கு), V.வினோத் சாந்தாராம் (கிழக்கு), S.விஜயகுமார் (தலைமையிடம்) ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















