திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி (09.04.2025) அன்று நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்கள் 16 பேர் காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப.,விடம் புகார் மனுக்கள் அளித்தார்கள். புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முகாமில் காவல் துணை ஆணையர்கள் V.கீதா, (மேற்கு) V.வினோத் சாந்தாராம், (கிழக்கு) S.விஜயகுமார்,(தலைமையிடம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்