திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்று வருகிறது. (08.01.2025) இன்று நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்கள் 18 பேர் காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப.,விடம் புகார் மனுக்களை அளித்தார்கள். புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் உறுதியளித்தார். இம்முகாமில் காவல் துணை ஆணையர்கள், V.கீதா, (மேற்கு) S.விஜயகுமார்,(கிழக்கு) கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்