திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களைப் பெற்றார். இதில் 4 பேர் மனு அளித்தனர். அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதேபோல் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., தலைமை வகித்து 27 மனுக்களைப் பெற்று அவற்றின் மீது விரைந்து விசாரணை நடத்தி தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்