மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பகுதியில், அமைந்துள்ள மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் செயல்பட்டு வருவதாகவும், அதை மீட்க வேண்டி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் காவல் நிலையம் அருகே சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நிலையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தில் வருவாய்த்துறை மற்றும் அறநிலைத்துறையிடம் பேசி உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்கப்படும் உத்தரவாதம் அளித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து, போராட்டத்தில் வெற்றிவேல் கூறுகையில் ஈடுபட்ட கூறுகையில் இந்த மலைஅடி கருப்பண்ணசாமி திருக்கோவில் பல நூறு ஆண்டுகளாக உள்ளது.
1ஏக்கர் 56சென்ட் அறநிலையத்துறைக்கு உட்பட்டது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆனால், ஒரு தனிநபர் மட்டும் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றார். இது தொடர்பாக, மாநகராட்சி, மின்சாரத்துறை அலுவலகத்திலும் மனு கொடுத்ததை யொட்டி அவர்களுக்கு கட்டிட அனுமதியும், புதிதாக மின் இணைப்பு அனுமதி தடுக்கப்பட்டது. 40 சென்ட் தனக்கு சொந்தமானது என போலி ஆவணங்களை வைத்து அங்கு கட்டிடங்களை கட்டப் பார்க்கிறார். வருவாய்த்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை வருவாய் துறை இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசவில்லை என, வெற்றிவேல்
கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















