கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களை தினமும் காலை 12 மணி முதல் 2 மணி வரை சந்தித்து மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் இந்நிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் அமரும் அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் (24.10.2025) ம் தேதி திறந்து வைத்தார். சட்டம் அறிவோம் இந்த அறையில் அனைத்து வகையான சட்ட புத்தகங்களும் பொதுமக்கள் தங்கள் சட்ட அறிவை வளர்த்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ளது. குடி தண்ணீர், கழிப்பறை வசதிகள் இந்த அறையில் பொதுமக்களுக்காக குடிதண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் உலக விஷயங்களை தெரிந்து கொள்ள தொலைக்காட்சியும், தினசரி செய்தித்தாள்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் திருமதி.சாயி லெட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
















