திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன்,இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல் துறையினர் பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக முக்கூடல் பகுதியில் பொதுமக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் முக்கூடல் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், மாபு ஜாண் சாலை பாதுகாப்பு விதிமுறைகள், பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், அதிவேகம் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர், மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நாள்தோறும் பொது மக்களை நேரில் சந்தித்து, புகையிலை மற்றும் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு பற்றியும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்