கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின் படி, நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு. சிவசங்கரன் அவர்கள் மேற்பார்வையில், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் திரு. வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீசார், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு காயம் ஏற்படுவதை தடுக்க, NO HELMET NO ENTRY ஸ்டிக்கர்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மழைக்காலமாக இருப்பதினால் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி தங்களுடைய பயணத்தை பாதுகாப்பாக அமைத்துக் கொள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
















