தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவான் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் 32 புகார் மனுக்களை பெற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டார். மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்பு புகார் மனு கொடுக்க வந்த பொது மக்களுக்கு மக்களின் காவலன் என்ற திட்டத்தினை எடுத்துக்கூறி பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து மேற்படி குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையுடன் இணைந்து அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.