தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி காவல்துறையினர் பொதுமக்களுக்கு போதை பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு. அதன்படி (27.12.2024) கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகிலாண்டபுரம் பகுதியில் பொதுமக்களிடமும், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநட்டார்குளம் பகுதியில் இளைஞர்கள் உட்பட பொதுமக்களிடம் காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டங்கள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.