திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளித்து வெளியிட்ட பத்திரிக்கை செய்தி பின்வருமாறு, சைபர் கிரைம் மோசடி நபர்கள் புதியதாக ஒரு மோசடியில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இதில் குறிப்பிட்ட நபர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களின் ஆதார் கார்டு விபரங்களை பயன்படுத்தி FedEx Courier மூலம் போதைப்பொருள் அல்லது சட்டவிரோத பொருட்கள் வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது சம்பந்தமாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதற்கான ஆதாரங்களை போலியாக தயார் செய்து மும்பை போலீசார் பேசுவது போன்று Skype Video Call-ல் தொடர்பு கொண்டு FIR Copy, Arrest Warrant போன்ற ஆவணங்களை போலியாக தயார் செய்து அவர்களை House Arrest செய்திருப்பதாகவும், இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள் வங்கி விபரங்கள் மற்றும் அவர்களிடம் இருக்கும் பணத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்ப சொல்லியும் verification முடிந்த பின்னர் தங்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக நம்ப வைத்து ஆன்லைனில் பணம் பறிக்கும் மோசடி நடந்து வருகிறது. இதனை நம்பி விவரங்களை பகிர்வோருக்கு பெரும் நிதி இழப்பும் ஏற்படுகிறது.
மேலும் போலியான வாட்ஸ் அப் கணக்குகளை பயன்படுத்தி, பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில், எஸ்.பி.ஐ. பரிசு புள்ளிகள் பற்றிய பொய்யான செய்திகள் அனுப்புகிறார்கள். ஹேக்கர்கள் இந்த குழுக்களின் ஐக்கான்கள் மற்றும் பெயர்களையும் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ என மாற்றுகிறார்கள். இந்த பொய்யான செய்திகள், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி விவரங்களை புதுப்பித்து எஸ்.பி.ஐ. பரிவு புள்ளிகளை கூறுமாறு கூறும் இணைப்புகளை கொண்டிருக்கும் இதனை நம்பி விவரங்களைத் தருவோருக்கு நிதி இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் நெட்வொர்க்குகளில் மொபைல் எண்ணுக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. இத்தகைய போலியான நடவடிக்கையில் திருநெல்வேலி மாநகர மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அல்லது சந்தேகத்திற்குரிய நடவடிக்கையை கண்டறிந்தால் பயப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம். சைபர் குற்ற தொலைபேசி உதவி எண்.1930-ஐ உடனடியாக அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கவும் என திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. சண்முகநாதன்