கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரைபடியும் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசலு அவர்கள் வழிகாட்டுதலின் படியும் சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக கடலூர் மஞ்சை நகர் பூங்காவில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலிசாரால் சைபர் கிரைம் சம்பந்தமாக பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், CELL PHONE பயன்படுத்துவதினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும், போலியான App களில் பெறும் கடன்கள், முக்கியமாக படித்த இளைஞர்களை குறி வைக்கும் Part Time Job Fraud ஆகியவை குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன.