கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேரணியில் பங்கேற்று, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் பள்ளி மாணவிகள் தலைக்கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. N. கோடீஸ்வரன், திரு. V. ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. S. தமிழ்இனியன், திருமதி. A. மனிஷா, திரு. P. அப்பாண்டைராஜ், திரு. S. சரவணகுமார் (பயிற்சி), காவல் ஆய்வாளர்கள் திரு. சந்துரு, திரு. அமர்நாத், உதவி ஆய்வாளர் திரு. பிரசன்னா மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
















