திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பொருநை புத்தகத் திருவிழா திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு வளர புத்தகம் வாசிப்பது என்பது மிக மிக அவசியமானது. எப்படி மனிதர்களுக்கு சுவாசிப்பது முக்கியமோ அது போல் வாசிப்பதும் முக்கியம், எனவே வரும் இந்த புத்தகத் திருவிழா நாட்களில் அனைவரும் புத்தகத்தை வாங்கி, படித்து, புத்தக வாசிப்பை பெருக்கிக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர். நெ.மணிவண்ணன் இ.கா.ப.
பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















