திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களது மேலான உத்தரவின்படி, ‘தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம், கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு வருடமும் பாதுகாப்புக்காக தேவையான காவல் ஆளினர்களை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், CCTV கேமராக்கள், Dome கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல், குற்றங்கள் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதே போன்று இந்த வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாவண்ணம் பண்டிகையை நல்ல முறையில் கொண்டாட வேண்டி கீழ்கண்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்காலிக காவல் உதவி மையம்:(Temporary Police Out-Post), பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர்கள் தங்களது உடைமைகளையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்து கொள்ளவும், அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகப்படும் படியான நபர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும், அது சம்மந்தமாக புகார் கொடுக்கவும், ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் (Temporary Police Out-Post) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் (Public Address System) மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆளினர்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்றச் சம்பவம் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.