கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் (15.12.2022) வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடசேரி பேருந்து நிலையம் மற்றும் வசந்தம் மருத்துவமனை சாலை பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் மற்றும் அதிரடி படையினரும் நேரடியாக பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகளிடமும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா எனவும், கஞ்சா விற்பனை பற்றி தெரிய வந்தால் உடனடியாக 7010363173 என்ற எண்ணுக்கு வாட்ஸப் செய்யுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் சட்டத்துக்கு விரோதமாக அசம்பாவித சம்பவம் நடக்கும் இருள் சூழ்ந்த பகுதிகளை சில இடங்களை பொதுமக்கள் கூறினார்கள்.உடனே அந்த பகுதிகளில் மின் விளக்குகள் ஏற்படுத்தப்பட்டு காவலர்கள் அந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை குறித்து ஆய்வில் ஈடுபட்டது பொதுமக்கள் இடையே மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.