திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி உவரி காவல் ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்கள், உவரி பகுதி பொதுமக்களுக்கும், கல்லிடைக்குறிச்சி உதவி ஆய்வாளர் திருமதி. அன்னஜோதி அவர்கள் கல்லிடைகுறிச்சி, ஜமீன்சிங்கம்பட்டி பகுதி பொதுமக்களுக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சைபர் கிரைம் இலவச எண் 1930 என்ற எண்ணிற்கு புகார் அளிப்பது குறித்தும், சிசிடிவி கேமரா அமைப்பதன் பயன்கள் குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.