இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. திருவாடானை உட்கோட்டத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று கலந்துரையாடினார்கள்.