மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் பேரனை முதல் அலங்காநல்லூர் வரை உள்ள பெரியாறு பிரதான இரு போக பாசன விவசாயிகள், நீரினை பயன்படுத்துவோர் சங்க புதிய நிர்வாகிகள், தேர்வு வாடிப்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில்,நடைபெற்றது. இதில், தலைவர்களாக 12 பேரும், உறுப்பினர்களாக, 49 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவர்களாக திரு. முருகன், திரு. அண்ணாதுரை, திரு. கிருஷ்ணன், திரு. விஜயன், திரு. ராமசாமி, திரு. ரவீந்திரன், திரு. செல்வம், திரு. அப்பாஸ், திரு. பெரியசாமி, திருமதி. மீனாட்சி ,திருமதி. ராஜு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 49, பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பெரியாறு பிரதான கால்வாய் உப கோட்ட உதவி செயற்பொறியாளர் திரு. சைய்யது ஹபீப், உதவி, பொறியாளர் திரு. ராதாகிருஷ்ணன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். பொதுப்பணி துறை அலுவலர்கள், மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி