திருப்பூர்: காவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் நட்புறவில் செயல்பட வேண்டும் என்பதற்காக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பொங்கல் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் காவல்துறை சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.அந்தப் போட்டிகளில், பொதுமக்களுடன் திருப்பூர் மாநகர காவல் அணியினர் பங்கேற்பார்கள். அதற்காக ஒவ்வொரு போட்டிக்கும் தனி அணி உருவாக்கப்படும். போட்டியில் காவல்துறை அணியினர் தனித்திறனை வெளிப்படுத்தக் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும் என்று விழாவினை துவக்கி வைத்த காவல் ஆணையர் கூறினார்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்