திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து அருகே சங்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (45). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி இவர் பணிபுரியும் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்நிறுவனத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம் திருடு போனது. இது குறித்து செந்தில்வேல் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர், வேல்கனி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த கருப்பசாமி மகன் ஈஸ்வரன் (32). என்பவரை கைது செய்து, பொக்லைன் இயந்திரத்தை மீட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















