திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு, S.P.தோட்டம் பகுதியில், தோட்டனூத்து, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சேவியர் மகன் அலோசியஸ் என்பவர் ஓட்டி சென்ற டிராக்டரை திடீரென நிறுத்தியதால் பின்னால் பைக்கில் வந்த சாணார்பட்டி, வடகாட்டுபட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் தனசேகர்(25). டிராக்டரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தனசேகரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















