திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ந்து மர்ம நபர்கள் பைக் திருட்டு தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய விசாரணை செய்து வந்தனர். இதனை தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஏ.எஸ்.பி.சிபின் மேற்பார்வையில், நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா,சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்ட், தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த சுரேந்தர், தீபக் மற்றும் கம்பத்தைச் சேர்ந்த (17). வயது சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா