கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்த ரஃபீக் என்பவர் தனது வீட்டில் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகார் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். உத்தரவின் படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசங்கரன் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. அஜய் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் இந்த பைக் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த கொம்பன் என்பவரது மகன் சபரி (22). மற்றும் அதே பகுதியை சேர்ந்த முகமது அமன் என்பவரது மகன் நிக்காஸ் நசீர் (19). என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து காணாமல் போன இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
















