திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து DSP குமரேசன் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமா் ,குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்ட், தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ், விவேக் ராஜா மற்றும் குற்றம் புரிய உடந்தையாக இருந்த திண்டுக்கல் மஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்த தாமரை கண்ணன்,முருக பவனத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா