கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கம்பிளார், தேவாண்டிவிளை பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை மார்த்தாண்டம் PPK மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகார் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். உத்தரவின்படி, மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நல்லசிவம் அவர்களின் மேற்பார்வையில், ஆய்வாளர் திரு.தமிழரசன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. இந்துசூடன் தலைமையில் விசாரணை செய்யப்பட்டது.
இந்த விசாரணையில் இந்த பைக் திருட்டில் ஈடுபட்டது உண்ணாமலைகடை, கம்மாள்விளை பகுதியை சேர்ந்த வினு குமார் என்பவரது மகன் விஷ்ணு(21). என்பது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டது. காணாமல் போன இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
















