திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,N. சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, மாவட்டம் முழுவதும் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அதில் சாலையில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும், சாகசங்கள் செய்யும் நபர்கள் மீது கிடைக்கப் பெறும் புகார்கள் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களையும் உன்னிப்பாக கவனித்து, அதில் சாலை விதிமுறைகள் மீறப்படும் நிகழ்வுகள் அறியப்படும் போது தாமதமில்லாமல், கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிகழாண்டில் சாலை விதிகளை மீறியவர்கள் மீது மாவட்ட காவல்துறையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், ரேஸ் டிரைவிங் – 703 நபர்கள, மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியவர் (Drunk & Drive) – 1523 நபர்கள், திறந்த வெளியில் மது அருந்தியவர்கள் – 3778 நபர்கள்,
அதிக வேகம் – 104 நபர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் – 10,692 நபர்கள்,
மற்றும் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 2602 நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
பொதுமக்களின் நலன் கருதி, சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் காலதாமதம் இன்றி நிறைவேற்றப்பட்டு வரப்படும் நிலையில், பொதுமக்களிடம் புகார் கிடைக்கப் பெற்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று யூகத்தின் அடிப்படையில் ஆதாரப்பூர்வமற்ற செய்திகளை சில நாளிதழ்கள் வெளியிட்டு பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இது காவல்துறையின் மீது களங்கம் ஏற்படுத்தும் செயலாகவும் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கமாகவும் பார்க்கப்படுகிறது. உறுதி செய்யப்படாத ஆதாரபூர்வமற்ற தகவல்களை நாளிதழ்களில் பிரசுரம் செய்து தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்தாமல் பொறுப்புடன் செய்திகளை வெளியிட மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்