மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலைய உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பேரையூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி.அஸ்வினி IPS., அவர்களின் அறிவுறுத்தலின்படி, நேற்று (25.01.2026)-ம் பேரையூர் இருந்து உசிலம்பட்டி சாலை சமத்துவபுரம் அருகே பேரையூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சின்ன்சாமி சம்பவ இடம் சென்று பார்த்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருந்தவர் இடம் காவல்துறை கண்டதும் ஓட எத்தனித்தவரை சுற்றி வளைத்து 1)அருண் பாண்டி (23/26). பேரையூர் தாலுகா கைது செய்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து 05 கிலோ அளவுள்ள கஞ்சா பறிமுதல் செய்தார். இது தொடர்பாக பேரையூர் காவல் நிலையத்தில் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.
இனி வரும் காலங்களில் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள். இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
















