மதுரை: பேரையூர் உட்கோட்டம் காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று பேரையூரில் நடைபெற்றது. இந்த பேரணிக்கு பேரையூர் உட்கோட்டம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி அஸ்வினி, ஐ.பி.எஸ்., அவர்கள் தலைமை தாங்கினார். பேரணியில் காவலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு, சாலை விதிகளை கடைபிடிப்பதின் அவசியம், ஹெல்மெட் அணிவது, வேகக்கட்டுப்பாடு, மதுபோதையில் வாகனம் ஓட்டுவதின் அபாயம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் சாலை விபத்துகளை குறைத்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
















