மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு தாதப்ப நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் அங்குள்ள மயான சாலை வழியாக ஆதான் ஓடை வரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கழிவுநீர் பல ஆண்டுகளாக செல்லும் வழியில் காய்ந்து போய்விடும். அந்த ஓடையில் மழைக்காலங்களில் மட்டும் நீர் வரத்து காணப்படும். அந்தக் கழிவு நீர் ஓடையில் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதனால், பேரூராட்சி நிர்வாகம் வேறொரு பகுதியில் வடிகால் அமைக்க முடிவு செய்தது. அந்தப் பகுதி மேடான பகுதி என்பதால் வடிகால் அமைத்த பின் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் முன்பு இருந்தது போல் மயானச் சாலையில் உள்ள வடிகாலில் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கிராமத் தலைவர் ராமு தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில்
செயல் அலுவலர் ஜெயலட்சுமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















