திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த பயணிகளுக்கு இடையூறாக நின்று கொண்டு சிலர் புகைப்பிடித்து கொண்டிருந்த நபர்களை பிடித்து தலா ரூ.100 அபராதம் விதித்தனர். மொத்தம் 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்த அபராத தொகைரூ.1200 ஆகும். இருந்தபோதிலும், மதுரை மாவட்டத்தில் பல ஊர்களில் பொது இடங்களில் புகை பிடிப்பது நின்றபாடில்லை. குறிப்பாக, டீ கடைகள்,உணவகங்களின் வாசல்கள், பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் புகை பிடிப்பது அதிகமாகி வருவதாகவும், அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொது இடங்களில், புகை பிடிக்கும் தடை சட்டத்தை அரசு கடுமையாக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி