விருதுநகர் : நரிக்குடி பேருந்து நிலையத்தில் இன்று காலை உலக்குடி செல்ல வேண்டி பேருந்திற்காக காத்திருந்த உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சசிகலா அவசரமாக பஸ் ஏறி பள்ளிக்கு சென்றதன் காரணமாக தனது இரண்டரை பவுன் தங்கசெயினை நரிக்குடி பேருந்து நிலையத்தில் பறிகொடுத்தார். இதனையடுத்து செயின் காணாமல் போனது குறித்து பள்ளி ஆசிரியர் சசிகலா நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதற்கிடையில் இன்று காலை பள்ளிக்கு வந்த நரிக்குடி தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவிகளான நரிக்குடியை சேர்ந்த சரவண சாஸ்தா மகள் மோகனாஸ்ரீ, பள்ளப்பட்டியை சேர்ந்த விஜயன் மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை சேர்ந்த சரவணக்குமார் மகள் தேவிகா ஆகியோர் அதனை பத்திரமாக மீட்டு தலைமையாசிரியர் மூலமாக நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் காவல் நிலையம் வந்த பள்ளி தமிழாசிரியர் சசிகலா காணாமல் போன செயின் குறித்த அடையாளங்கள் காட்டப்பட்டன.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது