கடலூர் : கடலூர் பேருந்து நிலையத்தில், பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வி என்பவர் சுமார் 200 கிராம் வெள்ளி கொலுசு, குங்குமச்சிமிழ் மற்றும் செல்போன் ஆகியவை காணாமல் போய்விட்டதாக அளித்த புகார் தொடர்பாக, திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் திரு. சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். துரிதமான விசாரணையின் மூலம் காணாமல் போன பொருட்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன. காவல்துறையினரின் இந்தச் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
















