திருச்சி : திருச்சி கீழகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து (56), இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று மத்திய பேருந்து நிலையத்தில், இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றபோது, பணியில் இருந்தார். அப்போது தலைமை தபால் நிலையம் அருகே பேருந்து வந்தபோது டி.வி.எஸ்.டோல்கேட் முடுக்குப்பட்டியை சேர்ந்த சரவணன் (25) என்பவர் பேருந்தில் ஏறினார். அப்போது டிக்கெட் வாங்குவது குறித்து மாரிமுத்துவுக்கும், சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஆனது. இதில் சரவணன் தன்னை தாக்கியதாக மாரிமுத்து கண்டோன்மெண்ட் காவல் துறையில், புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்.