திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானலில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது செண்பகனூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மதுரையை சேர்ந்த அண்ணன் ஷேக்முகமது, தம்பி பாசித் ஆகிய இருவரும் அரசு பேருந்து வழிமறித்து டிரைவர் ரவியிடம் தகராறு செய்து தாக்கினர். இதை தடுக்க வந்த நடத்துனர். திருப்பதியையும் தாக்கினார். இவர்களுக்கு ஆதரவாக வந்த பேருந்து பயணி ராஜசேகர் என்பவரையும் தாக்கினார். இதில் மூவரும் காயமடைந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து சகோதரர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா