திருநெல்வேலி: வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் மழை சேதங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவசர அழைப்பிற்கு பொதுமக்கள் இருக்கும் இடத்தை தேடி உதவிகள் செய்ய வசதியாக பேரிடர் மீட்பு குழுக்கள் (Tamil Nadu State Disaster Response Force) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் வாய்ந்த காவலர்கள் உள்ளனர்.பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N .சிலம்பரசன்,இ.கா.ப., ஆய்வு செய்தார். மேலும் பேரிடர் காலத்தில் மீட்பு குழுவினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், தயார் நிலையில் இருக்கவும் அறிவுரை வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்