திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பேரிடர் கால மீட்பு உபகரணங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பேரிடர் மீட்பு குழுவினர் தென்மேற்கு பருவமழை காலங்களில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது திருநெல்வேலி ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர், சுப்பிரமணியன்., மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர், பேச்சிமுத்து, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
