திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு இடங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பணிபுரியும் பேராசிரியர் ஒருவரிடம் மாணவர்கள் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் சரவண டைட்டஸ்ராஜா அளித்த புகாரின் பேரில், சேரன்மகாதேவி காவல் துறையினர் வழக்குப் பதிந்து அந்தக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மேலப்பாளையம் முத்துராசு (19). ஷேக்முகம்மது மைதீன் (20). வீரவநல்லூா் ஸ்ரீகரன் (20). சுவின் (20). ஆகிய 4 பேரை (10.10.2025) அன்று கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்