திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த சங்கீதா இவர் தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து R.M. காலனி மெயின் ரோட்டில் செல்போன் பேசி கொண்டு வந்து கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சங்கீதாவின் செல்போனை பிடுங்கி வேகமாக தப்பிச் சென்றனர்.
இது குறித்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர்மைதீன், நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மதன்(24). ஜெயபிரகாஷ்(22). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















