திண்டுக்கல்: திண்டுக்கல் ஏர்போர்ட் நகர்(விரிவாக்கம்) பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஹரிஹரன்(27).இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் உடல் நலக் கோளாறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் ஹரிஹரன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் ஹரிஹரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா