தஞ்சாவூர்: தஞ்சாவூர், காவிரி நகரைச் சேர்ந்த திருஞானம் மனைவி ஞானஜோதி, 62; துார்தர்ஷனில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருஞானம், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். சென்னையில் போலீஸ் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டராக உள்ள மூத்த மகன் சண்முகசுந்தரம், துார்தர்ஷன் சேனலில் பணியில் உள்ள இளைய மகன் வெங்கடேசன் இருவரும், சொத்து பிரச்னை காரணமாக, ஞானஜோதியை பராமரிக்காமல்விட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார்.
தண்ணீர், உணவு கிடைக்காததால் வீட்டுக்குள் தரையை சுரண்டி மண்ணை தின்று வந்த ஞானஜோதியை, இரவு சமூக நலத்துறையினரும், போலீசாரும் மீட்டு, தஞ்சை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.இது தொடர்பாக, தமிழ் பல்கலைக்கழக போலீசார், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தில், இரண்டு மகன்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
















